2024ல் பொதுப்பணித்துறையில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம்!
இலங்கையில் பொதுத்துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் எதிர்வரும் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் மூலம் இந்நாட்டில் பாரிய சமூக மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
“அடுத்த ஆண்டு முதல், நாங்கள் எங்கள் நாட்டை டிஜிட்டல் மயமாக்கத் தயாராகி வருகிறோம், மேலும் தூய்மையான இலங்கை திட்டத்தை எங்கள் நாட்டில் தொடங்க நாங்கள் தயாராகி வருகிறோம்.” என்று அவர் மேலும் தெரிவித்தார்.