போர் காலத்தில் இந்தியாவுக்குத் சென்ற அகதிகள் அனைவரும் மீண்டும் இலங்கைக்கு ?
தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளின் குடும்பங்களில் பிறந்த குழந்தைகளையும் சேர்த்து அவர்களின் எண்ணிக்கை 03 இலட்சத்துக்கும் அதிகம்…
அவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் இலங்கைக்கு வர விரும்பவில்லை… இந்திய அரசாங்கத்துக்கும் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது…
இவர்களது பிள்ளைகள் இந்தியாவில் படித்து அதே பகுதிகளில் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்… இல்லாத பிரச்சனையை உருவாக்காதீர்கள்… இலங்கைக்கு வந்து வீடும் வேலையும் இல்லாமல் எப்படி வாழ்வது?… என்பன அகதிகளின் கேள்வி! …
யுத்தத்தின் போது இலங்கையை விட்டு வெளியேறி இந்தியாவிற்குத் தப்பிச் சென்ற அனைத்து தமிழ் அகதிகளையும் மீண்டும் அழைத்து வருவதற்காக ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவரகத்தின் (UNHCR) தலைவருடன் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் நேற்று (22) கலந்துரையாடினார்.
அங்கு வடமாகாண ஆளுநர் UNHCR இன் சஞ்சித்த சத்தியமூர்த்தியிடம் அந்த அகதிகளை அழைத்து வர தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கூறினார்.
1992 ஆம் ஆண்டு, பெருமளவிலான மக்கள் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகவும், அவர்களில் பாதிக்கும் குறைவானவர்களே திரும்பி வந்ததாகவும் வடமாகாண ஆளுநர் கூறுகிறார்.
வட மாகாணங்களை விட்டு வெளியேறிய குடும்பங்களுக்கு இந்தியாவில் புதிதாகப் பிறந்துள்ள குழந்தைகள் உட்பட , கிட்டத்தட்ட மூன்று இலட்சம் தமிழர்கள் தற்போது இந்தியாவில் அகதி முகாம்களில் வாழ்கின்றனர்.
இதேவேளை, புதிதாகப் பிறந்த பிள்ளைகள் இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று அந்த மாகாணங்களில் பணிபுரிவதால் தமது குடும்பங்கள் வடக்கிற்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஏராளமான அகதிக் குடும்பங்கள் இந்திய அதிகாரிகளுக்கு முன்னர் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் இருந்து திரும்பிய பின்னரும் தமக்கு நிலமோ, வீடோ இல்லாததால் அவர்கள் வாழ்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மற்றொரு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திரும்பி வந்தாலும் வேலை கிடைப்பதில் பெரும் சிக்கல் இருக்கலாம் என்று அந்த அகதிகள் குறிப்பிட்டுள்ளனர்.