‘ஏஐ’ துறை ஆலோசகராக சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்த டிரம்ப்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை அமெரிக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத் துறை கொள்கை ஆலோசகராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டோனல்ட் டிரம்ப்.

வெள்ளை மாளிகையின் அறிவியல் தொழிநுட்ப கொள்கைத் துறையின் ‘ஏஐ’ பிரிவின் மூத்த கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் செயல்படுவார் என்று டிரம்ப் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். கிருஷ்ணன் ஏற்கெனவே ‘மைக்ரோசாஃப்ட்’, ‘டுவிட்டர்’, ‘யாஹு’, ‘ஃபேஸ்புக்’, ‘ஸ்நாப்’ போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் உடையவர். அவர் டேவிட் ஓ சாக்ஸுடன் இணைந்து பணிபுரிவார். டேவிட் சாக்ஸ் வெள்ளை மாளிகையின் ‘ஏஐ’, ‘கிரிப்டோ’ துறைத் தலைவராகச் செயல்படுவார்.

புதிய பதவி குறித்து ஸ்ரீராம் கிருஷ்ணன், “ஏஐ துறையில் அமெரிக்காவைத் தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்து, நாட்டிற்குச் சேவையாற்ற இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார். ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.