ஜப்பான் வடிவமைக்கும் இந்தியாவின் முதல் அதிவேக ரயில்.
அகமதாபாத் அதிவேக ரயில் (MAHSR) பாதையில் செல்வதற்கான அதிவேக ரயில்களை ஜப்பான் வடிவமைக்கிறது. இந்தியாவின் தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்ப ஜப்பானிய ஷிங்கன்சென் ரயில்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
பயணப் பெட்டிகளை வைக்க அதிக இடம், 50 டிகிரி செல்சியசுக்கும் அதிக வெப்பநிலையில் செயல்படும் திறன் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தியாவின் தூசி நிலைமைகளையும் கையாளும் வகையில் ரயில்கள் மாற்றியமைக்கப்படுகின்றன.
இந்தியாவும் ஜப்பானும் வடிவமைப்பை விரைவில் இறுதிசெய்ய உள்ளன. இது ஒப்பந்தப்புள்ளி செயல்முறையை எளிதாக்கும்.
அதிவேக ரயில்களுக்கான உள்நாட்டு உற்பத்தி திறன்களையும் அதிவேக ரயில் பாதைகளுக்கு ஏற்ற சமிக்ஞை அமைப்புகளையும் இந்திய ரயில்வே உருவாக்கி வருகிறது. அதே நேரத்தில் ஜப்பானில் இருந்து இறக்குமதியையும் தொடர்கிறது.
பிரான்சின் TGV, ஜப்பானிய ஷிங்கன்சென் போன்ற அதிவேக ரயில்கள் உலகளவில் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்குகின்றன.