மியன்மார் அகதிகள் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மியன்மார் அகதிகள் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்துக்கு நேற்றையதினம் மாலை 5 மணியளவில் அழைத்து வரப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள் படகு கரை ஒதுங்கியிருந்தது. பின்னர் கப்பல் கரைக்கு வர முடியாத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் கடற்படை தளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் திருகோணமலை ஐமாலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் தஞ்சம் கோரிய 115 முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த மியன்மார் அகதிகளும் மிரிஹானை இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்கான இடவசதி இல்லாத காரணத்தினால் இவர்களில் 103 பேர் இரண்டு பஸ்களில் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை தளமொன்றில் தற்காலிகமாக தங்கவைக்க அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
குறித்த படகில் 45 சிறுவர்கள், 24 பெண்கள், 46 ஆண்கள் உள்ளடங்கலாக 115 பேர் பயணித்துள்ளனர்.

இதனால் கடந்த 21ஆம் திகதி இவர்கள் மீது சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்தமை தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். அதில் சட்டவிரோத படகு பயணத்துக்கு உதவிய 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.