நாடாளவியரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் பட்டதாரிகள் எச்சரிக்கை .
இலங்கையில் அதிஉயர் 2 புள்ளிகளை பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு தேர்வில் முன் வழங்கப்பட வேண்டும் இல்லையெனில் நாடாளவியரீதியில் போராட்டம் முன்னெடுக்கபடும் என வடக்கு கிழக்கு உள்வாரி பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஸ்ரீஸ்கந்தராஜா சர்வகியன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் உள் வாரி பட்டதாரிகள் 2500 மேற்பட்டவர்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நியமனம் அரசினால் வழங்கப்பட்டது அரசினால் நியமனம் வழங்கப்பட்ட பொழுதிலும் 2014 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்ளுக்கு அதாவது 2020 / 2021 பட்டமளிப்பு பெற்ற பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கவில்லை. யாழ் பல்கலைக்கழகம் மாணவர்களை வேலைவாய்ப்பில் உள்ளீர்க்க வேண்டிய தேவை குறித்து தெளிவுபடுத்தி கடிதம் ஒன்றினை வழங்கியிருந்தது.