இன்று நவராத்திரி பண்டிகை விழா ஆரம்பம்.
நவராத்திரி முதல் நாள் நிகழ்வு
நவராத்திரி பற்றி ஒரு சிறு குறிப்பு…
நவராத்திரி பண்டிகை புரட்டாசி அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் சிவனுக்கு சிவராத்திரி கொண்டாடுவது போல புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட நவராத்திரி பண்டிகை கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு (2020)ஐப்பசி மாதம் முதல் நாள் அக்டோபார் 17ஆம் தேதி நவராத்திரி தொடங்குகிறது. பிரதமை தொடங்கி தசமி வரை ஒன்பது இரவுகள் அம்பிகையை அலங்கரித்து சிறப்பாக வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.
உலகத்தின் இயக்கத்திற்கு எல்லாம் சக்தி தான் ஆதாரம்.அந்த சக்தியை வழிபடுவதே நவராத்திரி திருவிழா. அம்மனை வழிபட்டால் அனைத்து ஆற்றலையும் பெறலாம். சக்தி இல்லை என்றால் இந்த உலகம் இயங்காது. அந்த சக்தியை வழிபடுவதற்காக உருவானதுதான் நவராத்திரி பண்டிகை. நவராத்திரி பண்டிகையின் ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு அம்மன் ஆலயத்திலும் அம்மனுக்கு தினசரி ஒவ்வொரு வடிவத்தில் அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.
அம்மனை சக்தி வடிவமாக இச்சா, கிரியா, ஞான சக்தி என மூன்று சக்திகளாக வழிபடுகின்றோம்.
வாழ்க்கையில் கல்வி செல்வம் வீரம் ஆகிய மூன்றும் முக்கியம். மூன்றும் கலைமகள், அலைமகள், மலைமகள் என மூன்று சக்திகளை வழிபடுகின்றோம். வாழ்க்கையில் மூன்றும் முக்கியம். வீரத்திற்கு மூன்று நாட்கள், செல்வத்திற்கு மூன்று நாட்கள், கல்விக்கு மூன்று நாட்கள் ஒதுக்கி ஒன்பது நாட்கள் வழிபடுகின்றோம். இதன் மூலம் நமக்கு சக்தி கிடைக்கும் அந்த சக்தியை நாம் நல்ல விசயத்திற்காக பயன்படுத்த வேண்டும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பாளுக்கு ஒன்பது வித அன்னையின் அவதார ரூபங்களால் அலங்கரிக்கப்படுவது வழக்கம்.
அந்த அன்னையின் உருவங்கள்,
முதல் நாளில் அன்னை மகேஸ்வரி ரூபம்
இரண்டாம் நாளன்று கெளமாரி ரூபம்
மூன்றாம் நாள் வராகி அம்மன் ரூபம்
நான்காம் நாள் மகாலட்சுமி தோற்றம்
ஐந்தாம் நாளில் வைஷ்ணவி ரூபம்
ஆறாம் நாள் இந்திராணியாக காட்சி தருவாள்
ஏழாம் நாளில் சரஸ்வதியாக அருள்வாள்
எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபம்
ஒன்பதாம் நாள் சாமுண்டியாக தோற்றம் வருகின்றாள் அன்னை.
அன்னையின் அருளால் “இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க” என பிரார்த்திப்போம்.