ரத்தன் டாடா நினைவாக 250 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டுள்ள கேக்…கிறிஸ்துமஸ் கேக் கண்காட்சியில்!
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெங்களூரில் 50-ஆவது ஆண்டாக கேக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பெங்களூரு பேலஸ் கிரௌண்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் பல விதமான கேக்குகள் பார்வையளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
அந்த வகையில், குறிப்பிடும்படியாக, அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலைப் பிரதிபலிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கேக் அதிகமாக கவனத்தை ஈர்க்கிறது. அதேபொல, சினிமா ரசிகர்களுக்காக ஜெயிலர் படம் உள்ளிட்ட பல திரைப்படங்களைப் பிரதிபலிக்கும் கேக்குகள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா நினைவாக சுமார் 250 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டுள்ள கேக் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. பேக்கிங் மற்றும் கேக் கலை மையத்தால் டாடா கேக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை வடிவமைக்க 10 நாள்கள் ஆனதாக கேக்கை கலைஞர்கள் சாந்தனு, மஹேஷ், ராகுல் ஆகியோர் தெரிவித்துள்ளனர். உலக பூகோள உருண்டை வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேக்கில் மையமாக டாடாவின் படம் அமைந்திருப்பது சிறப்பு.