அதிகரித்த மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துக் குறித்த போராட்டம் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

அதிகரித்த மதுபான சாலைகளை மூடுமாறும் கோரி கிளிநொச்சி பசுமைப்பூங்கா முன்றலில் இருந்து ஆரம்பமாகிய இந்த போராட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.

பேரணியைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சு.முரளிதரன் அவர்களிடம் மத தலைவர்கள் இணைந்து கையளித்தனர்.

இப் போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் சிவில் சமூக அமைப்புகள் மதத் தலைவர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெண்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.