சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள்.

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌனத்தை கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது.

டிசம்பர் 26, 2004 அன்று நடந்த இந்த பேரழிவில் 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். அந்தவகையில் நாளைய தினம் தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம் பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு வளாகத்தில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் நடைபெறவுள்ளது.

மேலும், மாவட்ட மட்டத்திலும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.