இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் நான்காவது டெஸ்ட் மெல்போர்னில் இன்று ஆரம்பம் .

இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் நான்காவது டெஸ்ட் மெல்போர்னில் துவங்குகிறது. இதில் வெற்றி பெற்று இந்தியா தொடரில் முன்னிலை பெற வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட ‘பார்டர் கவாஸ்கர்’ டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் (பெர்த்) இந்தியா, அடுத்து ஆஸ்திரேலியா (அடிலெய்டு) வெற்றி பெற்றன. மூன்றாவது டெஸ்ட் (பிரிஸ்பேன்) டிரா ஆனது.

தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் மெல்போர்னில், ‘பாக்சிங் டே’ போட்டியாக துவங்குகிறது.

Leave A Reply

Your email address will not be published.