தம்பதியர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல், வெல்லவ பிரதேசத்தில் தம்பதியர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (25ம் தேதி) இரவு, வீட்டுக்குள் புகுந்த கும்பல், 32 வயது கணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 30 வயது மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கணவனும் மனைவியும் குறித்த பகுதியில் தற்காலிகமாக வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு டி 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணமோ, சந்தேகநபர்கள் தொடர்பிலான தகவலோ இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.