உப்பாடா கடற்கரையில் தங்கம் கிடைப்பதால் குவியும் மக்கள் கூட்டம்!

உப்பாடாகடற்கரையில் தங்கம் கிடைப்பதால் மக்கள் குவிய தொடங்கியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா வருவாய் கோட்டத்துக்குள் அமைந்துள்ளது உப்பாடா கடற்கரை.

இந்த கடற்கரையில் தங்கம் கிடைப்பதாக பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக இங்கு குவிந்து தங்கத்தை சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.

நாள் ஒன்றுக்கு சிலர் ரூ.3500 மதிப்புள்ள தங்கத்தை சேகரிப்பதாகவும் கூறப்படுகிறது. தங்க மணி, சிறிய தங்க துண்டுகள் கிடைப்பதோடு சிலருக்கு தங்க நகைகளே கிடைப்பதாக கூறப்படுகிறது. சிலருக்கு நாள் முழுக்க தேடினாலும் எதுவும் கிடைக்காது.

இது குறித்து விசாரித்த போது, இதற்கு முன்பு ஏற்பட்ட கடல் சீற்றத்தில் வீடுகள், கோவில்கள் அடித்து செல்லப்பட்டன. அதில் இருந்த தங்க நகைகள் உள்ளிட்டவை கடலுக்குள் சென்றுள்ளன. இப்போது புயல் காலங்களில் அலைகளில் மீண்டும் கரைக்கு அடித்து வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இங்கு வாழ்ந்த மக்கள் புதிதாக கோவில், வீடுகள் கட்டும்போது இந்த கடற்கரையில் வந்து தங்கத்தை புதைத்துவிட்டு பணியை தொடங்குவதாகவும், அந்த தங்கமே தற்போது மக்கள் கைகளில் சிக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் தங்க வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில், உப்படா கடற்கரையை சுற்றுலா தளமாக மாற்ற ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.