புனித ஆண்டின் புதிய கருப்பொருள் “நம்பிக்கை”- போப் பிரான்சிஸ்.
போப் பிரான்சிஸ் பிறக்கவிருக்கும் புனித ஆண்டுக்கு “நம்பிக்கை” எனும் கருப்பொருளை அர்ப்பணித்துள்ளார்.
அடுத்த ஆண்டு உலகெங்கிலுமிருந்து சுமார் 32 மில்லியன் பேர் ரோமுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புனித ஆண்டை நேற்று அதிகாரபூர்வமாகப் போப் தொடங்கி வைத்தார்.
சக்கர நாற்காலியில் வந்த அவர் புனித பெசிலிக்கா (Basilica) தேவாலயத்தின் கதவுகளைத் திறந்து வைத்தார்.
ஐந்து கண்டங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் அவர்களின் பெற்றோரும் போப்பைப் பின்தொடர்ந்து தேவாலயத்துக்குள் சென்றனர்.
25 ஆண்டுக்கு ஒருமுறை வரும் புனித ஆண்டைக் குறிக்கிறது இந்தத் தொடக்கம்.
அந்த ஆண்டில் கத்தோலிக்கர்கள் ரோமுக்குப் புனிதப் பயணம் செல்வது வழக்கம்.
கைதிகளுக்கு வருங்காலத்தின் மீது நம்பிக்கையூட்ட போப் ரோமில் உள்ள ரெபிபியா (Rebibbia) சிறையின் கதவுகளை நாளை (26 டிசம்பர்) திறந்து வைப்பார்.
ஏழை நாடுகளைக் கடன் சுமையிலிருந்து விடுவிக்கவும், பூமியைப் பாதுகாக்கவும் கடப்பாட்டை உறுதி செய்யவும் புனித ஆண்டு ஒரு நல்வாய்ப்பு என்று கூறினார் போப்.