சிரியா பாதுகாப்புப் படை மீது தாக்குதல் – 14 பேர் மரணம்.
சிரியாவில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் மாண்டனர்.
மேலும் 10 பேர் காயமுற்றனர்.
தாக்குதலை நடத்தியவர்கள் முன்னைய அதிபர் பஷார் அல் அசாதின் ஆதரவாளர்கள் என்று புதிய கிளர்ச்சிப் படைத் தலைமையிலான அரசாங்கம் சொல்கிறது.
சிரியாவின் மேற்குப் பகுதியில் பாதுகாப்புப் படைகள் மீது திடீர்த் தாக்குதல் நடத்தப்பட்டதாய் அதிகாரிகள் கூறினர்.
முன்னைய அரசாங்கத்தின் அதிகாரியைக் கைதுசெய்ய முற்பட்டபோது பாதுகாப்புப் படை தாக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அசாதின் அரசாங்கம் ஹயாத் தாரீர் அல்-ஷாம் படையின் வசம் வீழ்ந்து 2 வாரத்துக்கு மேலாகிறது.
இதற்கிடையே சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லி சிரியாவில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.
பல்வேறு இனங்கள், சமயங்களைச் சேர்ந்த மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று தற்காலிக அரசு உறுதி தந்துள்ளது.