இந்தியாவின் முன்னணி எழுத்தாளர் M T வாசுதேவன் நாயர் காலமானார்.
இந்தியாவின் முன்னணி எழுத்தாளர் M T வாசுதேவன் நாயர் காலமானார்.
அவருக்கு வயது 91.
கேரள அரசாங்கம் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றும் நாளையும் அதிகாரபூர்வ இரங்கலை அனுசரிக்கிறது.
திரைப்படத்துறையிலும் செயல்பட்ட திரு M T வாசதேவன் நாயர் 9 நாவல்களும், 19 சிறுகதைத் தொகுப்புகளும், பல கட்டுரைத் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார்.
மகாபாரதத்தை பீமரின் பார்வையில் இருந்து பார்க்கும் அவரது ‘இரண்டாவது முனை’ மதிக்கப்படும் நாவல்களில் ஒன்று.
நெடுங்காலம் மாத்ருபூமி வாரப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.
அவரைச் சுற்றி எப்போதும் புத்தகங்கள் இருக்கும், ஒரு தியானத்தைப் போல் அவர் புத்தகங்களைப் படித்துக் கொண்டே இருப்பார் என்று மாத்ருபூமி அதன் நினைவஞ்சலியில் குறிப்பிட்டது.