2004 சுனாமி – நடந்தது என்ன?
26 டிசம்பர் 2004…..
20 ஆண்டுக்கு முன் இன்றைய நாள்…
நடந்தது என்ன?
–இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் காலை சுமார் 8 மணிக்கு – 30 கிலோமீட்டர் ஆழத்தில் 9.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.
–கடலடியில் 1,200 கிலோமீட்டர் நீளத்துக்குப் பிளவு
–அதன் விளைவாக ஏற்பட்டது சுனாமி. 30 மீட்டர் உயர அலைகள் எழுந்தன, அவற்றின் வேகம் மணிக்கு 800 கிலோமீட்டராக இருந்தது.
–பெருஞ்சேதம் – 226,400 உயிர்கள் பலியாயின
–இந்தோனேசியாவில் – 165,700 பேர்
இலங்கையில் -35,000 பேர்
இந்தியாவில் – 16,400 பேர்
தாய்லந்தில் – 8,300 பேர்
சோமாலியா – 300
மாலத்தீவு – 100 பேர்
– மலேசியா, மியன்மாரிலும் மரணங்கள்
-1.5 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர்
–மீட்பு நிதியாக உலகம் முழுவதிலுமிருந்தும் 14 பில்லியன் டாலர் திரட்டப்பட்டது.
–ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாயின.
-இந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தில் மட்டும் 100,000 வீடுகள் மீண்டும் எழுப்பப்பட்டன.
–எச்சரிக்கை அமைப்புகள் சரியாக இல்லாததே பேரிடரின் தாக்கத்தை மோசமாக்கியது என்பது தெரியவந்தது.
–இந்திய பெருங்கடலைச் சுற்றிய பகுதிகளில் சுனாமி தயார்நிலை குறித்த விழிப்புணர்வு தேவை என்பது உணரப்பட்டது.
–சுனாமி அலைகள் ஏற்பட்டால் சில நிமிடங்களுக்குள் தெரிவிக்கும் 1,400 எச்சரிக்கை நிலையங்கள் அமைக்கப்பட்டன.
–சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்கவும் ஆய்வுகளுக்கும் மில்லியன்கணக்கான டாலர் செலவிடப்பட்டது.
–இருப்பினும் சுனாமிப் பேரிடரின் தாக்கத்தை முழுமையாகத் தடுப்பது சிரமமே என்கின்றனர் அறிவியல் அறிஞர்கள்.