மன்மோகன் சிங் மறைவுக்கு தமிழ் நாட்டில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை அடுத்து தமிழ் நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு 9.51 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனையடுத்து மன்மோகன் சிங் மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

மேலும் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று காலை 9:30 மணி அளவில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை அடுத்து தமிழ்நாட்டில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் இந்த 7 நாட்கள் அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.