தமிழக அரசை கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்து அண்ணாமலை போராட்டம்!

திமுக அரசைக் கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தமிழக அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்றும் அண்ணாமலை வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை
கோவையில் உள்ள வீட்டுக்கு வெளியே இன்று காலை 10 மணியளவில், பச்சை நிற வெட்டி அணிந்து தன்னைத் தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொண்டு அண்ணாமலை போராட்டம் நடத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.