பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அருணின் காதலி அர்ச்சனா ..!!
பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தார் வந்து கொண்டிருக்கிறார்கள். பெத்தவங்க வந்து பிள்ளைகளை பார்த்து பேசிவிட்டு செல்லும் இந்த நேரத்தில் காதலன், காதலியை எல்லாம் அழைத்து வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார் பிக் பாஸ்.
என்னது இது பிக் பாஸ், காதலி, காதலனை எல்லாம் அழைத்து வரும் அளவுக்கு இறங்கிவிட்டீர்களே. இனி வரும் சீசன்களிலும் இதை போட்டியாளர்கள் எதிர்பார்ப்பார்களே என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலில் சௌந்தர்யாவின் காதலனான நடிகர் விஷ்ணு விஜய் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார். பல கேமராக்களுக்கு முன்பு என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா என ப்ரொபோஸ் செய்தார் சௌந்தர்யா.
அந்த கிராண்ட் ப்ரொபோசலால் ஏற்பட்ட தாக்கம் தீரும் முன்பு கடந்த சீசனின் டைட்டில் வின்னரான அர்ச்சனா தன் காதலர் அருண் பிரசாத்தை பார்க்க பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார். வெள்ளை நிற உடையில் அழகாக வந்த அர்ச்சனாவை பார்த்து அசந்து போய்விட்டார் அருண் பிரசாத்.
நான் ஹார்லி குயீன் ஹார்லி என சொல்வேனே அது இவங்க தான் என ஹவுஸ்மேட்ஸிடம் தன் காதலியை அறிமுகம் செய்து வைத்தார். டைட்டில் வென்ற அர்ச்சனா தன்னை போன்றே அருணும் வின்னராக வேண்டி அவரை தனியாக அழைத்துச் சென்று சில டிப்ஸுகள் கொடுத்திருக்கிறார்.
இந்த வீட்டில் உங்க கூட இருப்பேனு எதிர்பார்க்கவே இல்லை. இப்ப நீ எப்படி இருக்கியோ அது ரொம்ப நல்லா இருக்கு. உன் மேல உனக்கு இருக்கும் சந்தேகம் தான் உன்னை கீழே கொண்டு வருவது. யார் என்ன சொன்னாலும் எப்பொழுதுமே நீ தான் என் ஹீரோ என்றார்.
அதை கேட்ட அருணோ, என் பெஸ்ட்டை அடுத்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலியில் கொடுக்கிறேன் என்றார்.
இதையடுத்து அர்ச்சனாவை கட்டிப் பிடித்ததுடன் தூக்கவும் செய்தார் அருண். அதை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்களோ, சௌந்தர்யா ப்ரொபோஸ் செய்ததுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது அர்ச்சனா வருகை பெரிதாக இல்லை என தெரிவித்துள்ளனர்.