“மாசற்ற மனது, தூய அன்புக்கு சொந்தக்காரர் விஜயகாந்த்” – முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!

விஜயகாந்த் நினைவு நாளையொட்டி அவரை நினைவுகூர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தேமுதிகவின் அழைப்பை ஏற்று அரசியல் தலைவர்களும் வருகை தந்தவண்ணம் உள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்தின் மனைவியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா, விஜயகாந்தின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எல்.கே. சுதீஷ், விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

‘மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் – கேப்டன் விஜயகாந்த் அவர்களை நினைவுகூர்கிறேன்!’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.