பிக் பாஸ் 8, இரண்டு முறை டபுள் எவிக்ஷன் நிகழ்ந்துள்ள நிலையில் இடந்த வாரமும் இரண்டு பேர் அவுட்.
பிக் பாஸ் – Tamil 8: இந்த வாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர்கள்.
பிக்பாஸ் தமிழ் – 8 கிளைமேக்ஸை நோக்கி விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. பதினெட்டு போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு ஆறு பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் இணைந்தனர்.
24 போட்டியாளர்களில் அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் கடந்த வாரம் வரை 12 பேர் வெளியேறியிருந்தனர். மீதி 12 பேர் இருக்க, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் குறித்த தகவல் தற்போது நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ளது.
அதன்படி நாமினேஷன் பட்டியலில் இருந்தவர்களிலேயே மக்களின் வாக்குகள் அடிப்படையில் குறைவாக வாக்கு வாங்கிய அன்ஷிதாவும் ஜெஃப்ரியும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஜெஃப்ரியைப் பொறுத்தவரை பிக்பாஸ் வீட்டுக்குள் பெண் போட்டியாளர்களிடம் பழகுவதிலேயே முக்கால்வாசி நேரத்தைக் கழித்து வந்தார் என்று சொல்லலாம். எனவே இத்தனை நாள் இருந்ததே சாதனைதான் என்கிறார்கள்.
இந்த சீசன் தொடங்கியது முதல் இதுவரை இரண்டு முறை டபுள் எவிக்ஷன் நிகழ்ந்துள்ள நிலையில் இடந்த வாரமும் இரண்டு பேர் அவுட் ஆகியுள்ளனர்.
இவர்களில் அன்ஷிதா வெளியேறிய எபிசோடு இன்றே ஒளிபரப்பாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெஃப்ரி எபிசோடு நாளை ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.