மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது.. செயலாளரை துரத்தும் பொலிஸார்.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் பிபில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இஸ்ரேலிய தொழில் மற்றும் தென் கொரிய வேலைகளை வழங்குவதாகக் கூறி சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரின் இணைப்புச் செயலாளராக இருந்த பாக்ய காரியவசம் என்ற நபரே கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நபரும், மோசடியில் ஈடுபட்ட மேலும் பலர் தற்போது காணாமல் போயுள்ளனர்.