இனந்தெரியா குழுவினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்
சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகெமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வந்த இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக சீதுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்கள் படுகாயமடைந்துள்ளதுடன், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மகன்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லியனகேமுல்ல சீதுவ பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துக்காக பாவிக்கப்பட்ட கார் கட்டுநாயக்க பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் அது தீப்பிடித்து எரிந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.