மன்னார் மற்றும் புல்மோட்டையில் மூன்று அணுமின் நிலையங்கள் அமைக்க ஆய்வு
900 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மூன்று அணு உலைகளை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தேடுவதற்குத் தயாரிக்கப்பட்ட அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் அவதானிப்புகளைப் பெற்றுள்ளதுடன் , அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமான , எதிர்வரும் முதலாம் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என இலங்கை அணுசக்தி வாரியத் தலைவர் பேராசிரியர் எஸ். ஆர். டி. ரோசா கூறினார்.
இலங்கை அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு இணங்கும் நிறுவனத்திற்கு இத்திட்டம் ஒதுக்கப்படும் எனவும், மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு செலவிடப்படும் அனைத்துப் பணத்தையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்
மன்னார் மற்றும் புல்முடை பிரதேசங்களில் அந்தந்த அனல்மின் நிலையங்களை அமைப்பதற்கு ஏற்ற பல மக்கள் நடமாட்டமற்ற கடற்பரப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆய்வுக்கு பின்னர் 2035 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான இடங்கள் தெரிவு செய்யப்படும் எனவும் தலைவர் தெரிவித்தார்.