முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுலோச்சன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுலோச்சன கமகே மற்றும் மற்றுமொரு வர்த்தகர் ஆகியோரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது.
புறக்கோட்டை பகுதியில் வைத்து மற்றுமொரு வர்த்தகரிடம் லஞ்சம் வாங்கும் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சுவீகரிக்கப்பட்ட காணிக்கான இழப்பீடுகளை துரிதமாக பெற்றுக்கொடுக்கும் வாக்குறுதியின் பேரில் இந்த இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.