3ஆம் திகதி யோஷித குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு …. மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவிலிடம் 4 மணிநேரம் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (27) நான்கு மணிநேரம் விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெவில் வன்னியாராச்சி தனக்கு இருப்பதாக கூறப்படும் பாரியளவிலான சொத்துக்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பிலேயே இந்த கேள்விகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்சவை சட்டவிரோதமாக சொத்து சேர்த்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், அவர் எதிர்வரும் 3ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .
கதிர்காமம் பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்சவும் சட்டவிரோதமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டின் பேரில் விசாரிக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.