மட்டக்களப்பு பிரதான வீதி வெருகல் பாலத்திற்கு அருகில் விபத்து.!
திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி வெருகல் பாலத்திற்கு அருகில் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் கார் மற்றும் வேன் ஆகிய இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
வெருகல் பாலத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேனில் பயனித்தவர்கள் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்துக்கு காரணம் வாகன ஓட்டுனரின் தூக்கமே என்று கூறப்படுகின்து.