உப்பு தட்டுப்பாட்டுக்கு காரணம் யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு உப்பளங்களும் அபிவிருத்தி செய்யப்படாமையே : உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர்
உப்பு தட்டுப்பாடு அச்சம் காரணமாக உப்பை மொத்தமாக வீட்டில் சேகரிக்க வேண்டிய அவசியமில்லை என ஹம்பாந்தோட்டை இலங்கை உப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் டி. நந்தனதிலக கூறுகிறார்.
நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், லங்கா ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்தில் தற்போது 6000 மெற்றிக் தொன் உப்பு இருப்பதாகவும், அது ஜனவரி வரை போதுமானது என்றும் தெரிவித்தார்.
உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற சந்தேகம் காரணமாக 30,000 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி செய்ய தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு உப்பு உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு உப்பளங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு உப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படாததே இதற்குக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனவரி மாத நடுப்பகுதியில் அங்கு அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் மார்ச் மாதத்திற்குள் உற்பத்திப் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.