அடுத்த சுனாமி அரச பொது சேவைக்கு எதிரானதாகலாம் : லால் காந்த
கடந்த தேர்தலில் மக்களது சுனாமியால் அரசியல்வாதிகள் விரட்டியடிக்கப்பட்டனர் . அடுத்த சுனாமி நிச்சயம் அரச பொதுப்பணித்துறைக்கு வரும் என்று கூறிய விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த, பொதுப்பணித்துறை தொடர்பாக மக்களிடம் இருந்து பல புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன என்றார்.
தேவைப்பட்டால் பொது சேவைக்கு எதிராக அரசியல் சுனாமியை உருவாக்கும் திறன் தனக்கு இருப்பதாகவும் , ஆனால் அவர் இன்னும் அது குறித்து நினைக்கவில்லை என கூட்டமொன்றில் பேசும் போது தெரிவித்துள்ளார்.