போதைப்பொருள் பாவிப்போரை அல்ல, போதைப்பொருள் கொண்டு வருவோரை கைது செய்க : இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர
போதைப்பொருள் பாவனையாளர்களை இதுவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் , ஆனால் போதைப்பொருள் கொண்டு வந்தவர்களை பிடிக்கவில்லை எனவும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமது அரசாங்கத்திற்கு எவ்வித அரசியல் தடையும் இல்லை என தெரிவித்தார்.
எதிர்வரும் ஆண்டில் இருந்து இந்த நாட்டு இளைஞர்களை போதைப்பொருளில் இருந்து காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். எதிர்வரும் வருடத்தில் போதைப்பொருள் தடுப்புக்கான விசேட வேலைத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், காவல் துறையின் நேர்மையான தலையீடு எதிர்பார்க்கப்படுவதாகவும், இது ஊடக சாகச நிகழ்ச்சி அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.