முட்டை விலை குறைந்த போதிலும் அதனுடன் சார்ந்த தின்பண்டங்களின் விலை குறையவில்லை .
முட்டை ஒன்றின் விலை 22 மற்றும் 23 ரூபாவாக குறைந்துள்ள போதிலும், முட்டை தொடர்பான பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை என சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. முட்டையில் தயாரிக்கப்படும் முட்டை ரொட்டி, கொத்து, முட்டை ரோல் , பன், கேக் போன்ற முட்டை சார்ந்த தின்பண்டங்களின் விலை இன்றும் முட்டை விலையுடன் அதிகரித்து வருகிறது.
முட்டை 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட போது, ஒரு முட்டை ரொட்டியின் விலை, 120 முதல் 130 ரூபாய் வரை இருந்த நிலையில், தற்போது அந்த விலைக்கே முட்டை ரொட்டி விற்கப்படுகிறது. 70 ரூபாயாக இருக்கும் முட்டை ரோல் விலை இன்னும் குறையவில்லை.
முட்டை விலை குறைவடைந்ததன் பலனை நுகர்வோருக்கு வழங்காமல் மோசடி வியாபாரிகள் பெரும் இலாபம் ஈட்டும் நிலை காணப்படுகின்றமை சந்தை அவதானத்தில் காணப்படுகின்றது.