மகாவலி ஆற்றில் மிதந்த சடலம்.
பல்லேகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நத்தறம்பொத்த பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பல்லேகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொலங்கஹவத்த, கங்கல்ல பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 26.12.2024 முதல் காணாமல் போயிருந்ததாகவும், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் தெல்தெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் , பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.