அண்ணா பல்கலை. விவகாரம் – தமிழக ஆளுநருடன் விஜய் சந்திப்பு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திங்கள்கிழமை நேரில் சந்தித்தார்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து விஜய் மனு அளித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை கசிந்தது, கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது எனப் பல்வேறு முரண்கள் இருப்பதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திங்கள்கிழமை நேரில் சந்தித்த விஜய், அண்ணா பல்கலை. சம்பவத்தில் நியாயமான விசாரணைக்கு வழிவகுக்கக் கோரி மனு அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு முதல் முறையாக தமிழக ஆளுநரை நடிகர் விஜய் நேரில் சந்தித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.