நாட்டு துப்பாக்கி மற்றும் கோடாவுடன் ஒருவர் கைது…!

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் 18,000 மில்லி மீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் (30.12) தெரிவித்தனர்.

வவுனியா, பூவரசன்குளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இரண்டாம் செங்கல்படை பகுதியில் விசேட சுற்றி வளைப்பு ஒன்றை பூவரசன்குளம் பொலிசார் மேற்கொண்டனர்.

இதன்போது உள்நாட்டு துப்பாக்கி மற்றும் பெரல் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த கசிப்பு உற்பத்திக்கான 18,000 மில்லிலீற்றர் கோடா என்பன மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.