பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இளையதம்பி சிறிநாத் அவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் .
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எம் மக்களின் சார்பாக கலந்து கொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இளையதம்பி சிறிநாத் அவர்களினால் முன்வைக்கப்பட்டதும், கலந்தாலோசிக்கப்பட்டதுமான விடயங்கள் பின்வருமாறு,
1. ஏறாவூர் கருமாரியம்மன் கோயிலை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் மக்களுடைய காணி உரிமை பத்திரங்களை வழங்குவதற்கு ஏறாவூர் நகர சபை பொறுப்பதிகாரியுடன் நேரடியாக கலந்துரையாடி விரைவாக அச்செயற்பாட்டினை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தார்.
2. கொடுவாமடுவை அண்டிய தம்பானம் வெளி பிரதேசத்திற்கு குடிநீர் வசதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.
3. யானை தாக்குதலுக்கு உள்ளாகும் பிரதேசங்களில் குறிப்பாக கட்டுமுறிவு, சித்தாண்டி ஆகிய பிரதேசங்களுக்கு யானையின் அச்சுறுதலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வனவிலங்கு அதிகாரிகளுக்கு பணிபுரை விடுத்தார்.
4. கிரான், புலிபாய்ந்தகல் வீதியில் பாலம் ஒன்றினை அமைப்பதன் மூலம் சித்தாண்டி பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்மொழிந்தார்.
5. சட்டவிரோத வலை கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.
6. கடந்த காலங்களில் நடைபெற்ற வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளில் இடம் பெற்ற முறைகேடுகள், போடப்பட்ட வீதியின் தரம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக முன்மொழியப்ப்பட்ட பிரேரணைக்கு ஆதரவு வழங்கினார்.
7.எதிர்கால மட்டக்களப்பு மக்களின் நலன் கருதி சுற்றாடல் அதிகார சபை மற்றும் துறை சார்ந்த நிறுவனங்களின் ஒப்புதல் இன்றி அல்லது மோசடியாக பெறப்பட்ட திட்டங்களுக்கான அனுமதிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி அதனை மீள் பரிசீலனை செய்யும் தீர்மானத்திற்கு ஆதரவினை வழங்கினார்.
8. சித்தாண்டி மக்களின் மேய்ச்சற்தரை சம்பந்தமான பிரச்சனை காலதாமதம் இன்றி உடனடியாக முடிவுக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்தார்.