இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஸா மீதான போர், அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு உள்ளிட்ட பல நெருக்கடிகளுக்கு மத்தியில் நெதன்யாகு இச்சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
புரோஸ்டேட் அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நெதன்யாகுவின் உடல்நிலை தற்போது நல்ல நிலையில் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.
ஹடாசா மருத்துவ மையம் வெளியிட்ட அறிக்கையில்,
பிரதமர் மயக்க நிலையில் இருந்து எழுந்து நல்ல நிலையில் உள்ளார். அவர் மீட்புப் பிரிவு வார்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ள அவர் எதிர்வரும் நாட்களில கண்காணிப்பில் இருப்பார்’ என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புரோஸ்டேட் விரிவாக்கத்தால் நெதன்யாகுக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர் இச்சிகிக்சையை மேற்கொண்டுள்ளார்.
அதேநேரம் கடந்த மார்ச்சில், குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட நெதன்யாகு, கடந்த ஆண்டு ஜூலையில் இதய துடிப்பை சீராக வைத்துக் கொள்ளும் பேஸ்மேக்கரை உடலில் பொருத்தும் சிகிச்சையையும் மேற்கொண்டார்.