யாழில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை விட முயன்ற பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

யாழில் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை விட முயன்ற பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (31) காலை யாழ்ப்பாணம் – மிருசுவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த புகையிரதத்தின் முன்பாக தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் பெண்ணொருவர் பாய்ந்து உயிரைவிட முனைந்துள்ளார்.

எனினும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அவர், கொடிகாமம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.