நீதிபதிகளுக்கு இடமாற்றம்.
நீதிச் சேவை ஆணைக்குழு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பல நீதவான்களை இடமாற்றம் செய்துள்ளது.
இதுவரை கொழும்பு பிரதான நீதவானாக இருந்த திலின கமகே , மொரட்டுவை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவானாக கடமையாற்றிய திருமதி தனுஜா லக்மாலி கொழும்பு பிரதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவானாக திருமதி நிலுபுலி லங்காபுர நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மொரட்டுவை மாவட்ட நீதிபதியாக இருந்த திருமதி சத்துரிக்கா டி சில்வா, கல்கீசை நீதவானாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.