ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல்.
ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அந்தச் சட்டத்தின்படி, லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகள், வழக்குகள், நிர்வாக மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் குறிப்பிடத்தக்க சட்ட விளக்கம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இதன்படி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தம் செய்து சில புதிய பிரிவுகளை உள்ளடக்குவதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது.
இதன்படி, திருத்தப்பட வேண்டிய சரத்துக்கள் மற்றும் உள்ளடக்கப்பட வேண்டிய புதிய சரத்துக்கள் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய விரிவான அறிக்கையை சமர்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது.
இதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளர் தலைமையில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைவு திணைக்களம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி முன்வைத்த யோசனை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.