அடுத்து வரப்போவது , மக்களிடம் இருந்து அரசு ஊழியர்களுக்கான எதிர்ப்பு என்ற சுனாமியே! – விவசாய அமைச்சர் கே.டி.லால் காந்த
அடுத்தக்கட்ட போராட்ட அலைகள் மக்களிடம் இருந்து வரும் என்பதை உறுதியாக கூற முடியும் என்பதால், அதை அரசியல்வாதிகள் அல்ல, அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என விவசாய அமைச்சர் கே.டி.லால் காந்த தெரிவித்தார்.
ஜப்பான் நெல் விவசாயத் தொழில் நுட்பத்திற்கமைய நச்சாதுவ விவசாய கால்வாயை விரிவுபடுத்தும் திட்டம் தொடர்பில் கடந்த 27ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புப் பயணத்தின் பின்னர் மரக்கறி மற்றும் பழ ஏற்றுமதி நிலையங்களில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்தே அவர் மேற்படி கருத்தை தெரிவித்தார்.
ஜனாதிபதி முதல் எம்.பி.க்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் வரையிலான விமர்சனங்களை தற்போதைய அரசாங்கம் இல்லாதொழித்து செய்து வருவதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த குறிப்பிட்டு , அனைத்து முன்னேற்றங்களுக்கும் முன், அரசியலும், பொதுச் சேவையும் வருங்கால உலகத்திற்கு ஏற்றவாறு முழுமையாக மாற்றப்பட வேண்டும் என்றும், நில பயன்பாடு உள்ளிட்ட பருவம் தொடர்பான பயிர் பரிந்துரைகளின்படி விவசாயிகளைக் கையாள அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில்தேசிய இலக்கு சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் நீர்ப்பாசனத்திற்காக பெரிய திட்டங்கள் மற்றும் பெரிய நிதி பங்களிப்புகள் வழங்கப்பட்டாலும், அதனால் விவசாயிகளை கட்டியெழுப்புவதற்கு பதிலாக, அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் பொருளாதாரமே மேம்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.