சீமான் மீது வழக்கு தொடுத்துள்ள திருச்சி காவல் கண்காணிப்பாளர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமக்கு தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி வருவதாக, திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கூறியுள்ளார்.
இத்தகைய மிரட்டல்களுக்குத் தாம் ஒருபோதும் அஞ்சியதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சீமான் மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ள திரு.வருண்குமார், தமக்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் திருச்சி நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சீமான் ஒலிபெருக்கி முன்பு புலியைப் போல் பேசுவார் என்றும், மற்ற சமயங்களில் எலியைப் போல் செயல்படுவார் என்றும் விமர்சித்த திரு.வருண்குமார், தனது கடமையைச் செய்ததற்காக சீமான் தன்னை மிரட்டிப் பார்க்க நினைப்பதாகச் சாடினார்.