சீன இணைய ஊடுருவல்காரர்கள் அமெரிக்கக் கருவூலத்துறை ஆவணங்களைத் திருடினர்.

சீன அரசாங்கத்துக்காகப் பணிபுரியும் ஊடுருவல்காரர்கள், அமெரிக்கக் கருவூலத்துறையின் இணையத்தளத்துக்குள் ஊடுருவி ஆவணங்களைத் திருடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைய ஊடுருவல் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து டிசம்பர் 30ஆம் தேதியன்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

அமெரிக்கக் கருவூலத்துறைக்காக இணையப் பாதுகாப்புச் சேவை வழங்கும் நிறுவனத்தின் இணையத்தளம் ஊடுருவப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன்மூலம் அமெரிக்கக் கருவூலத்துக்குச் சொந்தமான ஆவணங்கள் திருடப்பட்டன.

இது மிகப் பெரிய இணைய ஊடுருவல் சம்பவம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்கக் கருவூலத்தின் அலுவலகங்களுக்குத் தொழில்நுட்ப ஆதரவு வழங்க இணையப் பாதுகாப்புச் சேவை வழங்கும் நிறுவனம் பயன்படுத்தும் கருவி ஒன்று ஊடுருவல்காரர்களுக்குக் கிடைத்ததாகவும் அதைப் பயன்படுத்தி அவர்கள் இணையத்தளத்தை ஊடுருவி ஆவணங்களைத் திருடியதாகவும் கூறப்படுகிறது.

இணைய ஊடுருவல் குறித்து இணையப் பாதுகாப்புச் சேவை வழங்கும் நிறுவனமான ‘பியோன்டிரஸ்ட்’ தெரிவித்ததும் அமெரிக்க இணையப் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புப் பாதுகாப்புப் பிரிவு, அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றுடன் அமெரிக்கக் கருவூலத்துறை இணைந்து செயல்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.