மலேசிய ஹோட்டலில் வெளிநாட்டு பெண் கொலை.
மலேசியாவின் பூச்சோங் (Puchong) நகரில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் பெண் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் 2 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அது குறித்து The Star செய்தி நிறுவனம் , அந்தச் சம்பவம் கொலை என வகைப்படுத்தியுள்ளது.
மாண்ட பெண்ணும் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.
புக்கிட் பூச்சோங் வட்டாரத்தில் 39 வயது மதிக்கத்தக்க இரு வெளிநாட்டவரைக் கொலை தொடர்பாக கைது செய்ததாக அந்நாட்டின் காவல்துறை தெரிவித்தது.
இருவரும் ஜனவரி 6ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் இருப்பார்கள்.
பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக செர்டாங் (Serdang) மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக The Star தெரிவித்தது.