மோதிக்கொள்ளவிருந்த இரு விமானங்கள் : தக்க நேரத்தில் விபத்திலிருந்து தப்பின (Video)

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) நகரின் அனைத்துலக விமான நிலையத்தில் இரு விமானங்கள் விபத்துக்குள்ளாகவிருந்து தெய்வாதீனமாக தப்பின .

Delta Airlines விமானமொன்று அட்லாண்டாவுக்குப் (Atlanta) புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தது. அதே வேளையில் Key Lime Air தனியார் விமானமொன்றும் ஓடுபாதையின் மறுபக்கத்திலிருந்து நுழையவிருந்தது.

இரு விமானங்களும் ஒன்றுக்கு ஒன்று மிக அருகில் இருந்ததை அவதானித்த, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி பீதியில் இரண்டு விமானங்களிடமும் நகர்வதை நிறுத்தும்படி அலறியதாக Fox News செய்தி நிறுவனம் தெரிவித்தது.

Key Lime Air விமானம் உடனடியாக நகர்வதை நிறுத்தியது.

அது வாஷிங்டன் டி.சியிலிருந்து Gonzaga பல்கலைக்கழகத்தின் ஆண் கூடைப்பந்துக் குழுவைப் போட்டிக்காக லாஸ் ஏஞ்சலிஸுக்கு அழைத்துச் செல்லவிருந்தது.

சென்ற திங்கட்கிழமை (27 டிசம்பர்) அந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.