அமெரிக்காவில் மக்கள் கூட்டத்தின் மீது வாகனம் மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில் வாகனம் மோதியதில்
10 பேர் பலி, 30 பேர் காயம்
அமெரிக்காவில் இன்று புதன்கிழமை காலை மத்திய நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்தின் மீது வாகனம் மோதியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அதிகாலை 3.15 மணியளவில் போர்பன் தெரு மற்றும் ஐபர்வில்லி சந்திப்பில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்பன் தெருவில் புத்தாண்டைக் கொண்டாட ஆயிரக்கணக்கானோர் கூடியதாகவும் கூறப்படுகிறது.
இது பரபரப்பான இரவு வாழ்க்கை மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற தெருவாகும்.
ஒரு டிரக், அதிக வேகத்தில் கூட்டத்தின் மீது மோதியதில் இந்த கோர சம்பவம் நடைபெற்றது.
மேலும் ஓட்டுநர் வெளியேறி ஆயுதத்தால் சுடத் தொடங்கினார் என்று செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகின்றன.
சிபிஎஸ் செய்தி அறிக்கையின் சாட்சிகளின் கணக்குகளின்படி, சந்தேக நபருடன் பொலிஸார் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படனர்.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள், அங்கங்கே இருக்கும் பரபரப்பான சூழலை காட்டுகிறது.
“ஆரம்ப அறிக்கைகள் படி, மக்கள் குழுவின் மீது ட்ரக் மோதியிருக்கலாம். காயங்கள் தற்போது உறுதிப்படுத்தப்படாத நிலையில், இறப்புகள் பதிவாகியுள்ளன” என்று நியூ ஆர்லியன்ஸ் காவல் துறை (NOPD) செய்தித் தொடர்பாளர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.