தென் கொரிய விமான விபத்து – தகவல் பதிவுப்பெட்டி அமெரிக்காவுக்கு…

தென் கொரியாவில் விபத்துக்குள்ளான Jeju Air விமானத்தின் தகவல் பதிவுப்பெட்டி ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் என்று தென் கொரிய சிவில் விமானப் போக்குவரத்துத் துணையமைச்சர் ஜூ ஜொங்-வான் கூறினார்.

உள்ளூரில் அதிலிருந்து தகவல்களைப் பெற முடியாததால் அதை அமெரிக்காவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

அமெரிக்காவின் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியத்துடன் அது குறித்து இணக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Boeing 737-800 ரக விமானங்கள் மீது சிறப்புப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகத் தென் கொரியா தெரிவித்தது.

முக்கியமாக, விமானத்தைத் தரையிறக்கும் சாதனங்கள் சோதிக்கப்படுகின்றன.

தரையிறக்கும் சாதனம் சரியாகச் செயல்படாததால் Jeju Air விமானம் விபத்துக்குள்ளானது. அதில் 179 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.