இன்று முதல் மலேசியாவில் சமூக ஊடக உரிம நடைமுறை ஆரம்பம்.

மலேசியாவில் சமூக ஊடக நிறுவனங்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கும் நடைமுறை இன்று முதல் நடப்பிற்கு வந்துள்ளது.

குறைந்தது 8 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட சமூக ஊடகங்கள், குறுஞ்செய்தித் தளங்கள் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியது கட்டாயம்.

அதைச் செய்யத் தவறும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நேற்றைய (31 டிசம்பர் 2024) நிலவரப்படி Telegram, Tencent (WeChat) ஆகியவை மட்டுமே உரிமம் பெற விண்ணப்பித்துள்ளன.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சட்டத்தைப் பின்பற்றுகின்றனவா என்பது அணுக்கமாய் கண்காணிக்கப்படும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் (Fahmi Fadzil) கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.