உக்ரேன் வழியாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வந்த ரஷ்ய எரிவாயு இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
உக்ரேன் வழியாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ரஷ்ய எரிவாயுவை விநியோகிக்கும் உடன்பாடு இன்றோடு முடிவுக்கு வருகிறது.
உக்ரேனின் Naftogaz நிறுவனமும் ரஷ்யாவின் Gazprom நிறுவனமும் செய்திருந்த ஐந்தாண்டு உடன்பாடு இன்று காலாவதியாகிறது.
மக்களின் ரத்தத்தை உறிஞ்சி ரஷ்யா கூடுதலாக பில்லியன் கணக்கான டாலர் வருமானம் ஈட்டுவதை அனுமதிக்க முடியாது என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறினார்.
தற்போதுள்ள சூழலை எதிர்கொள்ளத் தயாராகும்படி ஓராண்டுக்கு முன்பே ஐரோப்பிய ஒன்றியத்திடம் கூறிவிட்டதாக அவர் சொன்னார்.
தனது எரிவாயுக் கட்டமைப்பு நெகிழ்வானது; தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டது என்று ஐரோப்பிய ஆணையம் கூறியது.
எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் தடங்கலைச் சமாளிக்கப் போதிய இருப்பு உள்ளதாகவும் அது சொன்னது.
2022 இல் உக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து எரிவாயு இறக்குமதி செய்வதை வெகுவாகக் குறைத்துவிட்டன. இருப்பினும் ஒன்றியத்தின் கிழக்கே உள்ள நாடுகள் அவற்றின் எரிவாயுத் தேவைக்காக ரஷ்யாவையே பெரிதும் நம்பியுள்ளன.
கருங்கடல் வழியே TurkStream குழாய் மூலம் ஹங்கேரி, துருக்கியே, செர்பியா ஆகிய நாடுகளுக்கு ரஷ்யா தொடர்ந்து எரிவாயுவை விநியோகிக்க முடியும்.