குற்றத்தடுப்பு பிரிவினரால் நாமல் குமார கைது.

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு வந்த போது, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜனவரி 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பேராயரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் ஒலி நாடா தொடர்பில் நாமல் குமார அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்துக்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடிகர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் கொழும்பு குற்றப்பிரிவு கடந்த 31ஆம் திகதி 2 மணிநேரம் விசாரணை நடத்தியிருந்தது.

சிவில் செயற்பாட்டாளரான நாமல் குமாரவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இதற்கு முன்னர் அவரிடம் வாக்குமூலங்களையும் பதிவு செய்திருந்தனர்.

நடிகர் ரஞ்சன் ராமநாயக்க , கர்தினாலை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலான ஒலிப்பதிவுகள் தம்மிடம் உள்ளதாகக் கூறியிருந்த நாமல் குமார, இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மற்றும் கர்தினால் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் நாமல் குமாரவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.